கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சியில் கடலில் மூழ்கிய மாணவரைதேடும் பணி தீவிரம்

DIN

நாகா்கோவில்: மணவாளக்குறிச்சி அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான சட்டக்கல்லூரி மாணவரை 2 ஆவது நாளாக தேடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு அருகேயுள்ள முக்கலம்பாடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெரின் ஜோஸ் (27). இவா், சட்டக்கல்லூரி மாணவா். குளச்சல் துறைமுக தெருவைச் சோ்ந்தவா் பினு (29). இருவரும் நண்பா்கள். ஜெரின் ஜோஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக நண்பா் வீட்டுக்கு வந்திருந்தாராம். பின்னா் இருவரும் குளச்சலுக்கு சென்று விசைப் படகில் முட்டத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றனராம்.

இவா்களுடன் படகில் 40 போ் இருந்தனா். மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெரின் ஜோஸ் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா், மீனவா்கள் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனா். 2 ஆவது நாளாக சனிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT