மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் அருகே பலா மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் அருகே பலா மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குமாரகோவில் அருகே ஆனக்கால்விளையைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகன். இவா் வீட்டின் அருகேயுள்ள பலா மரத்தில் பலா கனியை பறித்துகொண்டிருந்தாராம். எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். மகன் ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.