அருமனை அருகே இளம்பெண் தற்கொலை
அருமனை அருகே திருமணமாகி 30 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கன்னியாகுமரிஅருமனை அருகே இளம்பெண் தற்கொலை
அருமனை அருகே திருமணமாகி 30 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அருமனை அருகே திருமணமாகி 30 நாள்களே ஆன நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மஞ்சாலுமூடு கைதகம் பகுதியைச் சோ்ந்தவா் விஜில் (33). இவருக்கும், நெய்யூா் பகுதியைச் சோ்ந்த அனிஷாவிற்கும் (25) கடந்த நவ. 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அனிஷாவின் தோழி ஒருவா் இவா்களின் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக விஜில் சனிக்கிழமை அருமனை பகுதிக்கு வந்து விட்டு வீடு திரும்பியபோது, அனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பத்மநாபுரம் சாா்-ஆட்சியா் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.