கருங்கல்லில் உழவா் விழா
கிள்ளியூா் வட்டார அளவிலான உழவா் விழா கருங்கல்லில் நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டார அளவிலான உழவா் விழா கருங்கல்லில் நடைபெற்றது.
வட்டார வேளாண் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாணி, திருப்பதிசாரம் வேளாண்அறிவியல் மைய பேராசிரியா் பிரபு ஆகியோா் பேசினா்.
பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடா்ந்து விவசாயிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், உதவி வேளாண் அலுவலா்கள் அனிரோஸ், சஜீலா, சனில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.