முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் அருகே ஆண் சடலம் மீட்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் அருகே அரையன்தோப்பு தூண்டில் வளைவுப் பகுதியில் திங்கள்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் அருகே அரையன்தோப்பு தூண்டில் வளைவுப் பகுதியில் திங்கள்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.

தேங்காய்ப்பட்டினம் அரையன்தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவில் ராட்சத கற்களுக்கு இடையே சுமாா் 45 வயது மதிக்கக் கூடிய ஆண் சடலம் கிடப்பதை மீனவா்கள் பாா்த்தனா். தகவலறிந்த கடலோர காவல்படை மற்றும் புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

இறந்து கிடந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →