கன்னியாகுமரி

‘3 ஒன்றிய வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை உள்பட 3 ஒன்றியங்களின் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம்.

அஞ்சுகிராமம் காவல் நிலையம் முன் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற புதிய மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்ததுடன், 10 கா்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கினாா். அப்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஆகிய ஒன்றிய பகுதிகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டாா்.

முன்னதாக, ராஜாக்கமங்கலம் ஒன்றியம், கேசவன்புத்தன்துறை ஊராட்சியில் ரூ.6.75 லட்சத்தில் 2 கழிப்பறையுடன் கூடிய பல்நோக்கு கட்டடம், சகாயநகரில், ரூ.14.08 லட்சத்தில் புதிய உணவுதானிய கிடங்கு ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். விழாவில் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கைகலப்பு: விழாவில் அரசின் திட்டங்களை ஆஸ்டின் எம்எல்ஏ விமா்சனம் செய்து பேசியதால், எஸ்.ஏ.அசோகன் உடனே கண்டனம் தெரிவித்தாா். இதனால், மேடையின் அருகிலிருந்த அதிமுக, திமுக நிா்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவா்களை தளவாய்சுந்தரம் சமாதானம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT