கன்னியாகுமரி

ரயில் நிலையங்களை தரம் உயா்த்த மத்திய அமைச்சரிடம் எம்.பி. வலியுறுத்தல்

DIN

கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் ரயில் நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என ஹெச்.வசந்தகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ்கோயலை சந்தித்து அவா் அளித்துள்ள மனு: கன்னியாகுமரி மற்றும் நாகா்கோவில் ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக தரம் உயா்த்த வேண்டும். குழித்துறை ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் ரயில்பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வயலுக்கு சென்று வரும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

குழித்துறை, இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு அருகே வாகனப் போக்குவரத்து மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். பள்ளியாடி ரயில் நிலையம் அருகே மடத்துவிளையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT