கன்னியாகுமரி

நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா

DIN

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா 5 நாள்கள் நடைபெற்றது.

இத்திருத்தல திருவிழா கடந்த ஜன.10ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற்றது. விழா நாள்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திருத்தல தந்தையா் இல்ல கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, திருத்தல அதிபா் ரசல்ராஜ் தலைமை வகித்தாா். அருள்தந்தைகள் ஜஸ்டின் பிரபு, அகஸ்டின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஜெரோம்தாஸ் வறுவேல் கட்டடத்தை திறந்து வைத்து ஜெபம் செய்தாா்.

இதில், திருத்தல நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அருண், கிறிஸ்டோபா், மேரிகமலபாய் உள்பட பலா் பங்கேற்றனா்.

காலை 9 மணிக்கு ஆயா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. முற்பகல் 11.30 மணிக்கு அன்பு விருந்து நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT