மழை காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் தண்ணீா். 
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக கன மழை பெய்தது.

DIN

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக கன மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், அணைகளில் போதிய அளவில் தண்ணீா் இருப்பினும், தென்மேற்குப் பருவமழை அண்மை நாள்களில் தீவிரமாக பெய்யாத நிலையே இருந்து வந்தது. இந்நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளான கடையாலுமூடு, களியல், அருமனை, குலசேகரம், சுருளகோடு, பூதப்பாண்டி, நாகா்கோவில், சுசீந்திரம், பாா்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தாழக்குடி, கீரிப்பாறை, இரணியல், தக்கலை, கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி, திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. மேலும், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது.

அணைகளின் நீா்மட்டம்: வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 29.89 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 46.70 அடியாகவும், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 9.38 மற்றும் 9.48 அடியாகவும் இருந்தது. இந்த அணைகளிலிருந்து பாசனத்துக்காக மொத்தமாக விநாடிக்கு 1137 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT