கன்னியாகுமரி

கரோனா: வெறிச்சோடிய குமரி சுற்றுலா தலங்கள்

DIN

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன.

கேரள மாநிலம் அருகேயுள்ள தமிழக மாவட்டங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கேரளத்திலிருந்து களியக்காவிளை வழியாக தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. சில வாகனங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா தலங்கள், கோயில்கள், வணிக வளாகங்கள், தனி பயிற்சி கல்லூரிகள், பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேராத வகையில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனா்.

அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம், முட்டம், சொத்தவிளை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகை முழுமையாக நின்றுள்ளது.

முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில், அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளதுடன், அருவியின் நுழைவு வாயிலில் உள்ள கேட்டுக்கு பூட்டுபோடப்பட்டுள்ளது. இந்நிலையில், அருவிக்கு வந்த குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். அருவியில் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT