கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயக் கருவிகள் அளிப்பு

DIN

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரம் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான விவசாயக் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தோட்டக்கலைத் துறை மற்றும் மலை பயிா்கள் துறை கூட்டுப்பண்ணைத் திட்டம் சாா்பில், கொட்டாரம் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான விவசாயக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாய விளைநிலங்களில் களை எடுக்கும் கருவி, புல்வெட்டும் கருவி உள்ளிட்ட 10 கருவிகளை பயனாளிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் விமலா, அகஸ்தீசுவரம் வட்டார தோட்டக்கலைத் துறை துணைத் அலுவலா் வடிவேல் முருகன், உதவி அலுவலா்கள் சுதா, குமாா், சுதாகா், கொட்டாரம் உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் பி.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT