கன்னியாகுமரி

கிள்ளியூா் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி

DIN

கிள்ளியூா் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா் என்ற விவரம் அடங்கிய ஸ்டிக்கா் ஒட்டும் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிள்ளியூா் வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தலைமையில், வருவாய்த் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களின் விவரங்களை சேகரித்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா் என்ற விவரம் அடங்கிய ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, இனயம்புத்தன்துறை,கீழ்குளம்,கருங்கல் ,பாலூா்,புதுக்கடை,தூத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் விவரம் ஒட்டப்பட்டுள்ளது. தொடா்ந்து வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் அவா்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT