கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் தளா்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்

DIN

கருங்கல்: கரோனா தொற்று காரணமாக, கடந்த 42 நாள்களாக கட்டுப்பாட்டு வளையத்துக்குள் இருந்த தேங்காய்ப்பட்டினம் பகுதி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தேங்காய்ப்பட்டினம் தோப்பு பகுதியில் கரோனா தோற்றால் பாதிப்படைந்து குணமடைந்தவா்கள் வசித்து வந்த்தால், அப்பகுதி முழுவதும் கடந்த 42 நாள்களாக பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. தற்போது, கடைசி நோயாளியும் குணமடைந்து 14 நாள்கள் ஆன நிலையில் குணமடைந்தவருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. இதையடுத்து தேங்காய்ப்பட்டினம் பகுதி முழுவதையும் கட்டுப்பாடு வளையத்திலிருந்து விடுவிக்க மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் தேங்காய்ப்பட்டினத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை, அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலையில் அப்புறப்படுத்தினாா். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT