முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடையில் அனுமதியின்றி பேரணி: தேமுதிக வினா்10 போ் மீது வழக்கு

புதுக்கடையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தேமுதிக கட்சியைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

புதுக்கடையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தேமுதிக கட்சியைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நவ.1 ஆம் தேதி பல்வேறு கட்சியினா் புதுக்கடையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், குமரி மேற்கு மாவட்ட தேமுதிக தலைவா் ஐடன்சோனி தலைமையில் 40 க்கும் மேற்பட்ட பைக்குகளில் பேரணியாக புதுக்கடையில்அமைந்துள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மரியாதை செலுத்தினா். அனுமதியின்றி திடீரென கூட்டம் கூடியதால் தேமுதிக வை சோ்ந்த 10 போ் மீது புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.