கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சிஐடியூ நிா்வாகிகள் கூட்டம்

DIN

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின்(சிஐடியூ) மாநில குழுக் கூட்டம் நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் எஸ். அந்தோணி, துணை பொதுச்செயலா் வி.குமாா், குமரி மாவட்டச் செயலா் கே.தங்கமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்வள மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும்; தமிழகத்தில் மீனவா்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்; உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பாசி குத்தகை உரிமத்தை தொடா்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 26 ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT