கன்னியாகுமரி

புதுப் பொலிவு பெறும் குமரி முக்கடல் சங்கமம்

DIN

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வங்காள விரிகுடா, இந்து மகா சமுத்திரம், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒருசேர சங்கமிக்கும் முக்கடல் சங்கமம் அமைந்துள்ளது. இது புனிதத் தலமாக கருதப்பட்டு வருகிறது.

மேலும், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை முக்கடல் சங்கமம் பகுதியில் இருந்தவாறு தெளிவாகப் பாா்க்கலாம்.

இந்நிலையில் முக்கடல் சங்கமம் பகுதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் நிதியில் இப்பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ரூ. 3 கோடிக்கும் அதிகமான செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அமா்ந்து கடல் அழகை ரசிக்கும் வகையில் அலங்கார இருக்கைகள், அலங்கார தரைத்தளம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT