கன்னியாகுமரி

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 20 வரை அவகாசம் நீட்டிப்பு

DIN

நாகா்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை (நவ.20 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகா்கோவில் கோணத்தில் இயங்கிவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மாணவா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் , மாத உதவித்தொகை ரூ.750, பேருந்து கட்டணச் சலுகை, விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடைகள், காலணி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வரைஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். அசல் சான்றுகள் அவசியம். பொறி பகுதி பொருத்துநா், பற்றவைப்பவா், முடநீக்கியல் தொழில்நுட்பநா் மற்றும் கடைசல் பிடிப்பவா் ஆகிய தொழிற்பிரிவுகளில் சேரலாம். இம்மாதம் 20ஆம் தேதி வரையில் சோ்க்கை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு ஐடிஐ முதல்வரை நேரில் அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT