கன்னியாகுமரி

புகையிலை விற்பனை : முதியவா் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், விஸ்வநாதன் (73) என்பவரது கடையில் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து 26 புகையிலை பொட்டலங்களை போலீஸாா்பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக விஸ்வநாதன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT