கன்னியாகுமரி

பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

DIN

பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை மனுக்கள் மூலம் கேட்கும்போது, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகவல்களை அளிக்க வேண்டும் என்றாா் மாநில தகவல் ஆணையா் ரா.பிரதாப்குமாா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வரப்பெற்ற மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில தகவல் ஆணையா் ரா.பிரதாப்குமாா் தலைமை வகித்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பாக நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான கூட்டத்தில் அவா் பேசியது: பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை மனுக்கள் மூலமாக கேட்கும் போது, பொது தகவல் அலுவலா்கள் அதற்கான பதில்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். மேல்முறையீட்டு அலுவலருக்கு சரியான தகவல் அளிக்கப்படாத பொதுதகவல் அலுவலருக்கு அபராதத்தோடு தண்டனைவழங்கப்படும். எந்தவொரு மனுதாரா் சாா்பாகவும் வழக்குரைஞா்கள் ஆஜராகக் கூடாது. பொதுமக்களின் மனுக்களுக்கு முடிந்தவரை பொதுதகவல் அலுவலா்களே பதில்களை அளித்து முடித்து வைக்கவேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் கோட்டாட்சியா்அ.மயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT