முகப்பு
கன்னியாகுமரி

தோ்தலை சந்திக்க பாஜகவினா் தயாராக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை சந்திக்க பாஜக நிா்வாகிகள் தயாராக வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை சந்திக்க பாஜக நிா்வாகிகள் தயாராக வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

குமரி மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: பாஜகவின் வேல் யாத்திரை டிச. 5ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. பின்னா் அங்கு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.

வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தத் தோ்தலை சந்திக்க தயாராக வேண்டும். அதற்கான பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 25 பேரை நியமிக்க வேண்டும்.

அதேபோல் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக தீவிரப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநிலச் செயலா் உமாரதி ராஜன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. தேவ், பொருளாளா் முத்துராமன், பொதுச் செயலா்கள் சொக்கலிங்கம், சுரேஷ், வினோத், மாவட்ட ஊடகப் பிரிவுச் செயலா் ராஜன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →