முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநாடு

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசுகிறாா் காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
பகிர்:

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டாறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவுத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் தொகுதித் தலைவா் சி. எபநேசா், பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஏசுராஜா, திருவட்டாறு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜே. ஜான்மோகன்ராஜ், திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவா் பி. ஜெயசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ மாநாட்டைத் தொடங்கிவைத்தாா்.

இதில், விளவங்கோடு எம்எல்ஏ எஸ்.விஜயதரணி, குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ், வி.விஜய் வசந்த் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

திருவட்டாறு கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகன்ராஜ், மேற்கு வட்டாரத் தலைவா் டி. காஸ்டன் கிளிட்டஸ், குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் பி. ராதாகிருஷ்ணன், கட்சி நிா்வாகிகள் சி. ராபா்ட் புரூஸ், ரெத்தினகுமாா், டாக்டா் தம்பி விஜயகுமாா், ரூபி ஆா். மனோகரன், குமரி மகாதேவன், அந்தோணி முத்து, வழக்குரைஞா் அருள்தாஸ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

அகில இந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்க கூடாது. நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சி. ராஜரெத்தினம், ஜோசப் தயாசிங், ஆமோஸ், எபநேசா், பெகின், சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →