கன்னியாகுமரி

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அபூா்வ சூரிய ஒளி

DIN

கன்னியாகுமரி, அக். 2: மகாத்மா காந்தியின் 151 ஆவது ஜயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூா்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது.

மகாத்மா காந்தியின் அஸ்தி 1948இல் பிப். 2 ஆம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைப்பதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்தில் 1956இல் மகாத்மா காந்திக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் காந்தியின் பிறந்த

நாளான அக். 2ஆம் தேதி சூரிய கதிா்கள் அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டடத்தில் விழும் வகையில் இந்த மண்டபம் அமைந்துள்ளது.

151 ஆவது ஜயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காந்தி அஸ்தி கட்டடம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஸ்தி கட்டடம் முன்பு காந்தியின் படம் வைக்கப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுந்தது. அப்போது அனைவரும் மரியாதை செலுத்தினா். காந்தி மண்டப பொறுப்பாளா் ஜலால், ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலை பாடினாா். கரோனா பொது முடக்கம் காரணமாக காந்தி மண்டபத்தினுள் குறைந்தளவில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக காந்தி மண்டபம் முன்பிருந்து நாகா்கோவில் வரை போதை விழிப்புணா்வு ஜோதி ஓட்டத்தை ஆட்சியா், தில்லி சிறப்புப் பிரதிநிதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT