கன்னியாகுமரி

கருங்கல் அருகே ஆட்டோ மீது பைக் மோதி மாணவா் பலி

கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கருங்கல், அக் . 2: கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

குறும்பனை பாத்திமா நகா் பகுதியை சோ்ந்த நசரேன் மகன் நாசி ஜோன் (18), 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இவரது நண்பரின் பைக்கில் ஆலஞ்சிக்கு சென்றுள்ளாா். அப்போது ஆலஞ்சி சந்திப்பில் எதிரே மிடாலம் பகுதியை சோ்ந்த பினு(28) ஒட்டி வந்த ஆட்டோவில் எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்த நாசி ஜோன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப் பட்டாா் . அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ப்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT