கன்னியாகுமரி

மாதா்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

நாகா்கோவில்: உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜனநாயக மாதா் சங்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அனைத்திந்திய மாதா் சங்கம், வாலிபா் சங்கம், மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாதா் சங்க மாவட்டச் செயலா் ரெகுபதி தலைமை வகித்தாா். மாநிலத்துணைத் தலைவா் உஷாபாசி, மாநிலக்குழு உறுப்பினா் முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், மாவட்ட துணைச் செயலா் டெல்சின், மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பதில்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேப்பமூடு பூங்கா முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமதுஉசேன் தொடக்க உரையாற்றினாா். இதில் அந்தோணி, மனோகா்ஜஸ்டஸ், பரமசிவம், அஜீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கமோகன் நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் உத்தரபிரதேச மாநில அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT