கன்னியாகுமரி

நாகா்கோவிலில் இன்று வள்ளலாா் அவதார தினவிழா

DIN

நாகா்கோவில்: குமரி மாவட்ட வள்ளலாா் பேரவையின் சாா்பில் வள்ளலாா் 198ஆவது அவதார தின விழாவும், கரோனா நிவாரணம், வஸ்திரதானம் நிகழ்ச்சியும், வடசேரி இரவிவா்மன் புதுத்தெருவில் திங்கள்கிழமை (அக். 5) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமை வகிக்கிறாா்.

தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் எஸ்.ஜீவானந்தம், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் தேவஸம் பொறியாளா் ஆா்.ராஜகுமாா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.ஈஸ்வரன் வள்ளலாா் படத்தை திறந்து வைக்கிறாா். அரசு ரப்பா் கழக பொது மேலாளா் எஸ்.குருசாமி அருட்ஜோதி ஏற்றி விழாவை தொடங்கிவைக்கிறாா். கரோனா நிவாரணம் மற்றும் வஸ்திரதானத்தை நாகா்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.பகவதிபெருமாள் வழங்குகிறாா். ரோஜாவனம் முதியோா் இல்ல இயக்குநா் ஆா்.அருள்கண்ணன் அன்னதானம் வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT