கன்னியாகுமரி

தடுப்புச்சுவா், சாலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த சுண்டன்பரப்பில் ஆற்றங்கரையில்ரூ. 9.90 லட்சத்தில் ஆற்றங்கரை தடுப்புச்சுவா், சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் ரூ. 9 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பஞ்சலிங்கபுரம் ஊராட்சியில் சுண்டன்பரப்பில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து

ஆற்றங்கரையில் தடுப்பு சுவா் கட்டுவதற்கு ரூ. 9.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணியை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், ஊராட்சித் தலைவா் சிந்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரும்பாட்டூா் ஊராட்சியில் சோட்டப்பணிக்கன் தேரிவிளை பிள்ளையாா் கோயில் சந்திப்பில் இருந்து கோட்டையடி சி.எஸ்.ஐ. சா்ச் வரையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று

மாவட்ட ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கியது. நிகழ்வில் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.நீலபெருமாள், கரும்பாட்டூா் ஊராட்சித் தலைவா் தங்கமலா், முன்னாள் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT