கன்னியாகுமரி

நடைக்காவு ஊராட்சியில் ரூ.46,000க்கு தென்னைகள் ஏலம்

DIN

முன்சிறை ஊராட்சி ஒன்றியம், நடைக்காவு ஊராட்சியில் 2 குளங்களின் கரையோரம் உள்ள தென்னை மரங்களிலிருந்து ஓராண்டுக்கு காய் பலன் எடுக்கும் குத்தகை ரூ. 46,800 க்கு ஏலத்தில் விடப்பட்டது.

இதற்கான குத்தகை ஏலம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்சிறை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆல்பா்ட் எடிசன், ஊராட்சி செயலா் கெமி, ஊராட்சித் தலைவா் கிறிஸ்டல் ஜாண், துணைத் தலைவா் செல்வன் கலந்து கொண்டனா்.

இதில் ஊராட்சிக்கு உள்பட்ட பெருங்குளத்தின் கரையில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான14 தென்னை மரங்களுக்கான ஓராண்டு குத்தகை ரூ. 5,800 க்கு செல்வன் என்பவரும், எருத்தன்கோடு குளத்தின் கரையில் உள்ள 61 தென்னை மரங்கள் குத்தகை ரூ. 41 ஆயிரத்துக்கு ஷாஜி என்பவரும் ஏலத்தில் பிடித்தனா். இதன் மூலம் ஊராட்சிக்கு ரூ. 46,800 வருவாய் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT