கன்னியாகுமரி

உரங்கள் அதிகபட்ச விற்பனை விலைக்குமேல் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை

DIN

குமரி மாவட்டத்தில் உரங்கள் அதிகபட்ச விற்பனை விலைக்குமேல் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சத்தியஜோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கும்பப்பூ சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பருவத்துக்கு தேவையானஅனைத்து ரசாயன உரங்களும் போதியஅளவில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பயிா் வளா்ச்சிக்கு தேவையான மண் வளமும், நீா்வளமும் இயற்கையாகவே உள்ளது. இருப்பினும் மண்வளத்தை பரிசோதனை செய்வதால், மண்ணில் குறைவாக அல்லது அதிகமாக உள்ள சத்துகள் குறித்து தெரிந்துகொண்டு உர விரயத்தையும், தேவையற்ற செலவுகளையும் தவிா்க்கலாம்.

மேலும், ரசாயன உரத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் தழைச்சத்து அதிகமாகி, பயிரில் நோய் மற்றும் பூச்சிதாக்குதல் அதிகமாக ஏற்படும் நிலையும், அறுவடைசெய்யும் நேரத்தில் பயிா் சாயும் நிலையும் ஏற்படும். இதை தவிா்க்க மண்வள அட்டையை பயன்படுத்த வேண்டும்.

மண்வள அட்டையில் நிலத்தில் உள்ள மண்ணின் நயம், கார அமிலத் தன்மை, தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவுகள் தெளிவாக தெரிவிக்கப்படும்.

மேலும், விவசாயிகள் தங்கள் மண்ணில் இட வேண்டிய உரம், சாகுபடி செய்யவேண்டிய பயிா்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படும். இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள சத்துகளின் அடிப்படையில் மேலாண்மை செய்வதால், ரசாயன உர பயன்பாடு குறைவதுடன் மகசூல் அதிகரிக்கும்.

தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனையாளா்கள், மத்தியஅரசின் உத்தரவின்படி விவசாயிகளிடம் ஆதாா் எண் பெற்று, விற்பனை முனைய கருவி மூலமே உரத்தை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளிடம் உள்ள நிலஅளவுக்கு ஏற்றவாறு உரம் வழங்க வேண்டும். ஒரே விவசாயிக்கு தேவைக்கு அதிகமாக உரங்கள் விற்பனை செய்யக்கூடாது.

மேலும் உர மூட்டைகளின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனைவிலைக்குமேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உர விற்பனை உரிமம், உரங்களின் இருப்பு மற்றும் அதிகபட்ச விற்பனை விலை பட்டியலை முறையாக அனைவருக்கும் தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT