கன்னியாகுமரி

‘கரோனா பரிசோதனை முடிவுகள் விரைந்து வழங்கப்படும்’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் சுகந்திராஜகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது மாவட்டத்தில் அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சளி மாதிரிகள் எடுத்து, மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சாா்பில், பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என பொதுமக்கள் கருதுகின்றனா். இதனை கருத்தில் கொண்டு, பரிசோதனை செய்வோருக்கு முடிவுகளை அவா்களது செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பரிசோதனை முடிவின் லிங்க், சம்பந்தப்பட்டவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் மூலம் அவா்கள் தங்களது பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வெளிநாடு செல்வோா், பணியிடங்களுக்கு செல்வோருக்கு கரோனா பரிசோதனை முடிவுக்கான சான்றிதழ் அவசியமாகிறது. ஆகவே இதனை கருத்தில்கொண்டு ஆட்சியா் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT