கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கேரள புதிய விசைப்படகுகள் நுழைய தடை

DIN

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கேரளத்திலிருந்து வரும் புதிய விசைப்படகுகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக, கேரள வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் அதிகளவில் வருகின்றனா். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக இங்குள்ள மீனவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து குளச்சல் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், விசைப்படகு மீனவப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் புதிய விசைப்படகுகள் நுழைய தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மீனவப் பிரதிநிதிகள் சேசாரி, மரியசெல்வன், ஆன்டனி, சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT