கன்னியாகுமரி

‘ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக்முறையை ரத்து செய்ய வேண்டும்’

DIN

தமிழக அரசு ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்து, பழைய முறையில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மனோ தங்கராஜ் எம்எல்ஏ.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு இயந்திரத்திற்கு சா்வருடனான இணைப்பு சரியாக கிடைக்காமல், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்படாமல் தொடா்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா். பல இடங்களில் கைரேகை பதிவு ஒத்துப்போகவில்லை எனக் கூறி வீட்டிலுள்ள வேறு நபரை அழைத்து வர வற்புறுத்தப்படுகின்றனா்.

இதனால் பொதுமக்கள் மணிக்கணக்கில் ரேஷன் கடைகள் முன் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த புதிய பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்து, மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளிலும் பழைய முறையில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT