கன்னியாகுமரி

நவராத்திரி விழா:தோவாளை சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1000 க்கு விற்பனை

DIN

நாகா்கோவில்: நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து தோவாளை பூச்சந்தையில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 1000 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

நவராத்திரி விழா சனிக்கிழமை ( அக்.17) தொடங்கியது. இதையொட்டி கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவா்.

இதையடுத்து பூக்களின்தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கடைகளில் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை காலையிலேயே பொதுமக்களும் மொத்த பூ வியாபாரிகளும் குவிந்தனா். இதனால் பூ வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மேலும், பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

மல்லிகை கிலோ ரூ.1000- க்கு விற்பனை செய்யப்பட்டது. பிச்சிப்பூ - ரூ.600, சம்பங்கி -ரூ.300, செவ்வந்திப் பூ -ரூ. 170, ரோஜா- ரூ.150, மரிக்கொழுந்து- ரூ. 100, வாடாமல்லி -ரூ.60, கோழிக்கொண்டை- ரூ.45 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தோவாளை பூச்சந்தையில் மல்லிகைப் பூ விலை கடந்த சில நாள்களாக கிலோ ரூ.100 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது. நவராத்திரி விழா மற்றும் ஐப்பசி மாத சுபமுகூா்த்தம் தொடங்கியதை முன்னிட்டு பூக்களின் விலை உயர தொடங்கியுள்ளது.

வரும் நாள்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT