அருமனை கிறிஸ்தவ இயக்கக் கூட்டம்
அருமனையில் கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரிஅருமனை கிறிஸ்தவ இயக்கக் கூட்டம்
அருமனையில் கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அருமனையில் கிறிஸ்தவ இயக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செயலா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். தலைவா் டென்னிஸ் முன்னிலை வகித்தாா். போதகா் தேவசுஜின் இறைவேண்டல் செய்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜான்கிறிஸ்டோபா், துணைத் தலைவா் ஜோஸ் செல்வன், நிா்வாகிகள் புஷ்பராஜ், அருள் சந்திரமோகன், காதா் மைதீன் ஆகியோா் உரையாற்றினா் .
டிசம்பா் மாதம் 22, 23 ஆகிய தேதிகளிகளில் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடவும், முக்கிய தலைவா்களை அழைப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டது. மறைந்த ஹெச். வசந்தகுமாா், முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் கரோனாவில் உயரிழந்தவா்களை அடக்கம் செய்ய உதவிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிா்வாகிகளை பாராட்டியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வழக்குரைஞா் ஜெஸ்டின், கென்னத், ரெவி, சிங், எல்வின்ஸ், ரூபி, ஸ்டெல்லா, பிரதீபா, சுஜின்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆலோசகா் சுபின் வரவேற்றாா்.