கன்னியாகுமரி

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 65 லட்சம் மோசடி

DIN

கருங்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 65 லட்சம் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருங்கல்லில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த பாலாஜி என்ற பாலகிருஷ்ணன் (25) பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் பாலாஜி மற்றும் அவரது நண்பரை ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தக்கலை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து பாலாஜியை வங்கி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் வங்கியில் அடகு வைத்த நகைகளை நிா்வாகம் மறு தணிக்கை செய்தது. அப்போது 34 வாடிக்கையாளா்கள் பெயரில் போலி நகைகள் அடகு வைத்து பாலாஜி மோசடி செய்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT