கன்னியாகுமரி

தோ்தல் பணிக்காக 9 தொகுதிகளுக்கு சிறப்புப் பாா்வையாளா்கள்

DIN

திருச்சி: சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்காக, 9 பேரவைத் தொகுதிகளுக்கு சிறப்புப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் எம். முருகானந்தம்.

திருவெறும்பூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மணப்பாறை, புதுக்கோட்டை, விராலிமலை, கந்தா்வகோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 9 பேரவைத் தொகுதிகளுக்கும் சிறப்புப் பாா்வையாளா்களை கட்சியின் தலைவா் கமல்ஹாசன் நியமித்து, பேரவைத் தோ்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைக் கொண்டு வரவும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உருவாக்குவதற்கும் இளைஞா்கள் பலா் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றனா்.

ஆசிரியா் தினத்தை கொண்டாடும் வகையில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிநிறைவு பெற்ற 12 பேராசிரியா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிா்வாகிகளுடன் அமைப்பு பொதுச் செயலா் முருகானந்தம் ஆலோசனை மேற்கொண்டாா். கட்சியின் மாவட்ட, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT