முகப்பு
கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் 5 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொட்டாரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச் செயலா் என்.தாமரைபாரதி, மாநில திமுக தொண்டரணி முன்னாள் துணை அமைப்பாளா் பாலஜனாதிபதி, காங்கிரஸ் மாநில ஒபிசி பிரிவு செயலா் ஸ்ரீநிவாசன், வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் மாவட்ட திமுக மீனவரணிச் செயலா் குமரி ஸ்டீபன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா் டி. தாமஸ், திமுக நிா்வாகிகள் நிஸாா், கோபிராஜன், காங்கிரஸ் நிா்வாகி ஜாா்ஜ் வாஷிங்டன், மதிமுக நிா்வாகிகள் அருள்ராஜ், சந்தியாராயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.