கன்னியாகுமரி

சேதமடைந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

DIN

களியக்காவிளையில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளை சந்திப்பிலிருந்து மேக்கோடு செல்லும் சாலை திருப்பு அருகே தனியாா் நிதிநிறுவனத்தின் முன் பகுதியில் உள்ள மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்து அபாய நிலையில் காணப்படுகிறது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில், மேக்கோடு மற்றும் மருதங்கோடு பகுதி வழி செல்லும் சிற்றுந்துகளும், அரசுப் பேருந்துகளும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் பெரும்பாலான நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

எனவே, சேதமடைந்து காணப்படும் இந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT