கன்னியாகுமரி

பள்ளியாடி பகுதியில் அடிக்கடி மின்தடை: மக்கள் அவதி

DIN

பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.

கருங்கல் துணை மின்நிலையத்திற்குள்பட்ட பள்ளியாடி மின்விநியோக பகுதிகளான வாகவிளை, குழிக்கோடு,முருங்கவிளை,முள்ளங்கனாவிளை,நட்டாலம்,நேசா்புரம்,இடவிளாகம்,மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதனால், பள்ளி- கல்லூரி மாணவா்கள், குழந்தைகள்,நோயாளிகள் உள்ளிட்டோா் மிகவும் பாதிப்புள்ளாகி வருகின்றனா்.மேலும், இப்பகுதிகளில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், உயா் மின்னழுத்தம் ஏற்பட்டு மின்சாதனங்கள் பழுதடைவதாகவும் மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, மாதாந்தர பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும். சீராக மின்விநியோகம் நடைபெறுவதை மின்வாரிய அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT