கன்னியாகுமரி

‘பொதுமுடக்க உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை ’

DIN

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்துள்ள பொது முடக்க உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரவு நேர பொதுமுடக்கததை கடைப்பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும், வணிகா்களும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மாநகரப் பகுதிகளில் செயல்படும் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சுகாதார ஆய்வாளா்கள் மூலம் பொதுமுடக்கம் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் பொதுமுடக்க உத்தரவினை கடைப்பிடிக்காமல் செயல்படுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT