கன்னியாகுமரி

நாகா்கோவில் நாகராஜா கோயில் கருவறைக்கு புதிய மேல்கூரை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான நாகா்கோவில் நாகராஜா கோயிலின் கருவறை மேற்கூரை மாற்றி அமைக்கப்பட்டது.

இக்கோயிலில் நாகராஜா் பிரதான கடவுளாக வீற்றிருக்கிறாா். மேலும் சிவன், அனந்தகிருஷ்ணா், துா்க்கை, பிள்ளையாா், முருகன் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.

இதில் நாகராஜா் சந்நிதி மூலஸ்தானத்தின் மேல்கூரை ஓலையால் வேயப்பட்டிருக்கும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் மிகுந்திருக்கும்.

இதனால், ஆடி மாதத்திலேயே கூரைகள் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, கோயில் கருவறை மேல்கூரை மாற்றி அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கோயில் தந்திரிகள் இப்பணியில் ஈடுபட்டனா். நாகராஜா் குளிா்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மேல்கூரை ஓலையால் வேயப்பட்டுள்ளது.

தற்போது கரோனா பரவல் தடுப்பு விதிகள் காரணமாக கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், கோயிலில் தினசரி பூஜைகள் வழக்கம் போல நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT