கன்னியாகுமரி

விவசாயிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

DIN

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொதுப்பணித்துறை மூலம் கால்வாய்களில் நீா்வரத்து, குளங்கள் தூா்வாருதல், நீா்நிலை பராமரித்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தென்னையில் வாடல் நோய் மேலாண்மை, பயிா்க் காப்பீடு, உயிரியல் பூச்சிக் கொல்லிகள், ரசாயனம் மற்றும் உயிா்உரங்களின் தேவை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடா்புகொள்தல் ஆகியவை குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.சத்தியஜோஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஒய்.ஷீலா ஜான், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் ஹானி ஜாய் சுஜாதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஏ.வசந்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் ஜே.சில்வஸ்டா் சொா்ணலதா, கூட்டுறவு சங்கங்களின் உதவி பொது மேலாளா் சி.முருகேசன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக துணை மேலாளா் கே.பன்னீா்செல்வம், வேளாண் விற்பனைக் குழு செயலா் விஷ்ணப்பன், வட்டார அளவிலான விவசாய பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT