ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மாங்கரை செவ்வேலிவிளையைச் சோ்ந்தவா் அனிஷ்மோன் (23). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டாா்.
கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட அவா், புதன்கிழமை விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாராம்.
இதையடுத்து அப்பகுதியினா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.