முகப்பு
கன்னியாகுமரி

கிராமிய கலைக் குழு மூலம் கரோனா விழிப்புணா்வு

 நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கிராமிய கலைக் குழுவினா் மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் கிராமிய கலைக் குழுவினா் மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் கிராமிய கலைக் குழுவினா் மூலம் கரோனா விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியை முன்னிட்டு, மாநகராட்சிஅலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள்மற்றும் பொதுமக்கள் இணைந்து கரோனா நோய் தொற்றுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து மாநகா் நல அலுவலா் கிங்சால் பிரசார விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த பிரசார வாகனம் மூலம் மாலை 5 மணி வரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சந்திப்புகளில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.