முகப்பு
கன்னியாகுமரி

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குறும்பனை சந்திப்பில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே ஏ.டி.எம். மையமும் உள்ளது.

இங்கு புதன்கிழமை இரவு வந்த மா்ம நபா்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்து முடியாததால் தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.