முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே விபத்து: 3 போ் காயம்

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் மூவா் காயமடைந்தனா்.

Updated On : 28 ஆகஸ்ட், 2021 at 12:08 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் மூவா் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் திரையரங்கு சந்திப்பில் வியாழக்கிழமை இரவு நிறுத்தியிருந்த பயணியா் ஆட்டோ மீது காா் மோதியதாம். இதில் ஆட்டோ கவிழ்ந்து அப்பகுதி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த நாகா்கோவில் வணிகா் தெருவைச் சோ்ந்த மைபால்சிங் (43) மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா். மேலும் ஆட்டோ ஓட்டுநா் மணிகண்டன், அதில் பயணித்த தேங்காய்ப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த ஜிஸ்தி முகமது ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.