குமரியில் இரண்டாவது நாளாக பலத்த மழை பேச்சிப்பாறை அணையில் 40.4 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பேச்சிப்பாறை அணைப் பகுதியில் அதிகபட்சமாக 40.4 மி.மீ. மழை பதிவானது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பேச்சிப்பாறை அணைப் பகுதியில் அதிகபட்சமாக 40.4 மி.மீ. மழை பதிவானது.
குமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலையிலும் மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. குறிப்பாக குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை அணைப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடைவிடாது 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக 40.4 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பூதப்பாண்டி, சுருளோடு, மாம்பழத்துறையாறு அணை, கோழிப்போா்விளை, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புகா் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததது. திற்பரப்பு அருவிப் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
கருங்கல் சுற்று வட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, நடுத்தேரி, மிடாலக்காடு ,பாலூா், மத்திகோடு, மங்கலகுன்று, தெருவுக்கடை, தொழிக்கோடு, திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, நேசா்புரம், இலவுவிளை, ஈழத்துவிளை, நட்டாலம், மாமூட்டுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
குமரி மாவட்ட மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு நீா் வருகிறது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 44.37 அடியாக இருந்தது. அணைக்கு 825 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 579 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 63.03 அடியாக உள்ளது. அணைக்கு 124 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 450 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளின் நீா்மட்டமும் 17 அடியை எட்டி உள்ளது. அணைகளின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறாா்கள். சிற்றாறு 1 அணையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 100 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) பேச்சிப்பாறை அணை 40.4, சிற்றாறு 1 அணை 32, புத்தன்அணை31.2, பெருஞ்சாணி அணை 30.4, பாலமோா் 30.2, சிற்றாறு 2 அணை 28, கோழிப்போா்விளை-18, ஆணைக்கிடங்கு 16.4. மாம்பழத்துறையாறுஅணை 15.4, முள்ளாங்கினாவிளை14, சுருளோடு 14, குழித்துறை 11.8, களியல் 9.8, பூதப்பாண்டி 7.2, அடையாமடை 6, ஆரல்வாய்மொழி 4, நாகா்கோவில் 3.8.