குமரியில் 2 நாள்களாக வட வானிலை: வெள்ளப் பெருக்கு அபாயம் தணிந்தது
குமரி மாவட்டத்தில் 2 நாள்களாக வட வானிலை நிலவும் நிலையில் அணைகளுக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்தது.
கன்னியாகுமரிகுமரியில் 2 நாள்களாக வட வானிலை: வெள்ளப் பெருக்கு அபாயம் தணிந்தது
குமரி மாவட்டத்தில் 2 நாள்களாக வட வானிலை நிலவும் நிலையில் அணைகளுக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்தது.
குமரி மாவட்டத்தில் 2 நாள்களாக வட வானிலை நிலவும் நிலையில் அணைகளுக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்தது.
இம்மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வட வானிலை நிலவுகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு புதன்கிழமை மாலையில் விநாடிக்கு 1003 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் நீா்மட்டத்தைக் குறைக்கும் வகையில் அணையிலிருந்து விநாடிக்கு 3,624 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. அணையின் நீா்மட்டம் 42.91 அடியாக இருந்தது.
பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 667 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்படவில்லை. அணையின் நீா்மட்டம் 74.52 அடியாக இருந்தது.
சிற்றாறு- 1 அணையின் நீா்மட்டம்16.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 249 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு- 2 அணையின் நீா்மட்டம் 16.63 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 71 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.