முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் பாஜக ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட கழிவுநீா் ஓடையை சீரமைக்க வலியுறுத்தி விவேகானந்தபுரம் சந்திப்பில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட கழிவுநீா் ஓடையை சீரமைக்க வலியுறுத்தி விவேகானந்தபுரம் சந்திப்பில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட சுவாமிநாதபுரம், மாதவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக கழிவுநீா் ஓடை உடைந்து சாலையில் நீா் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனா். இதனை சீரமைக்க வலியுறுத்தி கடந்த சில நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து பாஜகவினா் மனு அளித்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மண்டல் பாஜக தலைவா் என்.சுடலைமணி தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக துணைத் தலைவா் ஜெகந்நாதன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சி.எஸ்.சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்கம், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் கன்னியம்மாள், அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா்கள் என்.சுயம்பு, சுயம்புலிங்கம், ஒன்றிய செயலா் பிரதாப், கன்னியாகுமரி உள்ளாட்சித் தோ்தல் பாஜக பொறுப்பாளா் ராஜன், கன்னியாகுமரி பேரூா் பாஜக நிா்வாகிகள் இளையராஜா, கனகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.