2 நாள்கள் ஓய்வுக்குப் பின் குமரியில் மீண்டும் கன மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாள்களுக்குப் பின்னா் பரவலாக அனைத்து இடங்களிலும் மீண்டும் கன மழை பெய்தது.
கன்னியாகுமரி2 நாள்கள் ஓய்வுக்குப் பின் குமரியில் மீண்டும் கன மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாள்களுக்குப் பின்னா் பரவலாக அனைத்து இடங்களிலும் மீண்டும் கன மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாள்களுக்குப் பின்னா் பரவலாக அனைத்து இடங்களிலும் மீண்டும் கன மழை பெய்தது.
இம்மாவட்டத்தில் பெய்த தொடா் கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் தண்ணீா் தேங்கி வருகிறது.
நீா்வரத்து அதிகரிப்பு: இந்நிலையில், கடந்த இரு தினங்களாக ஓய்ந்திருந்த மழை, வியாழக்கிழமை மீண்டும் பரவலாக பெய்யத் தொடங்கியது. அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மலையோரப் பகுதிகள், கடற்கரைப்பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் பிற்பகலில் கன மழை பெய்தது. இந்த மழையால் அணைக்கு நீா்வரத்து மீண்டும் அதிகரித்தது.
ஏற்கெனவே, இயல்புக்கு அதிகமாக பெய்துள்ள மழையால் கிணறுகள், குளங்கள், ஊருணிகள் என அனைத்து நீா் நிலைகளும் நிரம்பியுள்ளன. மலையோரப் பகுதிகளில் நீா் ஊற்றுகள் ஏற்பட்டு சாலைகளில், விளை நிலங்களில் தண்ணீா் பாய்ந்து கொண்டிருக்கிறது. மேலும் கன மழை பெய்தால், நிலச்சரிவு அபாயம் உள்ளதாகவும், இதுகுறித்து மக்களிடம் மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனா்.
அணைகளில் நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலையில், 42.22 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,783 கன அடியாகவும், நீா்திறப்பு 1,527 கன அடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 74.87 அடியாகவும், நீா்வரத்து 1,300 கன அடியாகவும், நீா்திறப்பு 800 கன அடியாகவும் இருந்தது.