முகப்பு
கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே கால்வாயில் இளைஞா் சடலம் மீட்பு

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கால்வாயில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே கால்வாயில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

பூதப்பாண்டி அருகே கால்வாயில் இளைஞா் சடலம் கிடப்பதாக பூதப்பாண்டி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனா். மீட்கப்பட்ட இளைஞா்உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. அவா் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து வீசி சென்றாா்களா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பூதப்பாண்டி, கீரிப்பாறை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் யாராவது மாயமாகியுள்ளாா்களா என்பது உள்ளிட்ட விவரங்களை போலீஸாா் சேகரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.